Wednesday, 18 July 2018

பழுவேட்டரையர்கள் 

கீழப்பழுவூர்-கீழையூர் -மேலப்பழுவூர் 

மறவனீச்சுவரம் -ஆலந்துரைமஹாதேவர் ஆலயம் -இரட்டைக்கோவில்  -பகைவிடைஈஸ்வரம் .

சிற்றரசர்களின் சரித்திரத்தில் இத்துனை பெயரோடும் புகழோடும்  இருந்திருக்குமா!

 பேரரசின்கீழிருந்தும், தனக்கென  தனி படைக்களத்தோடுராஜ்ஜியம் புரிந்திருக்குமேயானால் !அப்பேரரசில் எத்துனை  மதிப்பும் செல்வாக்கும் நம்பிக்கையுடைய உறவும் பூண்டிருத்தல்வேண்டும்.

பேரரசு செலுத்திய மன்னர்பெருமக்கமள் இறைவனுக்கு தமது பெயரைசூட்டி ஆலயம் எடுத்தமைபோல் பழுவேட்டரையர் தன்பெயரில் எடுப்பித்த க்கற்றளி #மறவனீச்சுவரம் அதன்பின் அவரது சந்ததியினர்  அவர்களது ஆட்சிக்குட்பட்டப்பகுதியில் எழிலார்ந்த பேரழகுவாய்ந்த திருக்கற்றளிகளை எடுப்பித்துத்தருளுகின்றனர் ,

மேலும் ,

 பழுவூர் சிற்றரசமரபினர் சோழப்பேரரசு ஆட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள ஆலயங்களுக்கெல்லாம் அரும்பெரும் அறக்கொடை புரிந்துள்ளமையை காணும்போது அவர்கள் எத்தனை செல்வச்செழிப்போடு இருந்துள்ளனர் என அறியமுடிகின்றது அவைகள் ,

திருவையாறு பஞ்சநதிஸ்வரர் , திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் ,லால்குடி சப்தரிஷிகேஸ்வரர், உடையார்குடி அனந்தீஸ்வரர் ,கோவிந்தபுத்தூர் கங்காஜடாதீஸ்வரர் போன்றவைகளை கூறலாம் . சிற்றரசர்களாக இருந்தபோதிலும் அரசுசெலுத்துவதிலும், அறம்செய்தததிலும் , சிவப்பணியிலும், தன்னைநிலைநிறுத்திக்கொண்டனர் .

இவர்கள்  எடுப்பித்த ஆலயங்களில் மறவனீசுவரம் எனும் பசுபதீஈஸ்வரர் ஆலயம் அழிவுறும் நிலையில் உள்ளது, அருகிலிருக்கும் ஆலந்துரையார் ஆலயம் சமீபத்தில் சீரமைத்து குடமுழுக்கு நடைபெற்று வண்ணமயமாய் காட்சிதருகிறது .ஆனால அருகிலேயே இருக்கும் இந்த பாசுபதீசுவரரை உள்ளூர் மக்கள் கைவிட்டபோதும் இறைவன் அரியலூர்- தஞ்சைசாலையில் வருவோர்போவோர் அனைவரிலும் எவரேனும் ஒருவர் தமது இருப்பிடத்தை காத்தருள்வர்என்று காத்திருக்கிறார் பன்நெடுங்காலமாக.

ஆறுதலான விஷயம் சிவனடியார்கள் சிலர் ஆலயத்தை கவனித்துக்கொள்கிறார்கள் விரைவில் இவ்வாலயமும் புத்துயிர் பெறவேண்டுமென்று ஆவாகொண்டு அவர்கள் பதாகை வைத்துள்ளனர் , தொல்லியல்துறையும் இந்துசமய அறநிலையத்துறையும் அவர்களது சிறப்புக்களை சொல்லத்தேவையில்லை ? 

மாபெரும் மன்னன் எடுப்பித்த # மானம்பாடி ஆலயத்தையே !மண்மேடாய் மாற்றிவிட்டனர். 

















No comments:

Post a Comment