வரலாற்றை வரலாறாகமட்டும் பாராமல் இன்றும் அந்த ஊர் மக்கள் உணர்விலும் உள்ளத்திலும் அசைபோட்டுக்கொண்டிருப்பதை காண்கையில் மற்ற ஊர்மக்களும் இதுபோல் வரலாற்று தொன்மையையும் பாரம்பரியசின்னங்களின் மீதும் சிறிதளவேனும் அக்கறை கொண்டால்போதும் இன்னும்பலத்தலைமுறைகளுக்கு பாதுக்காப்பாய்க்கணக்கிடைத்திடும் ,
மதிரைக்கொண்ட கோப்பரகேசரியின் முதற்புதல்வன் ராஜாதித்தன் தக்கோலப்போரில் இறந்துவிட இரண்டாம் புதல்வன் கண்டிராதித்தசோழர் ஆட்சிப்பொறுப்பேற்கிறார் ( 950 - 957 ) சிவநெறிசெல்வரான இவர் பாடிய திருப்பதிகம் ஒன்பதாம் திருமுறையில் உள்ளது குறிப்பிடதக்கது , இம்மன்னர் பெருமான் காவிரியின் வடகரைத்தலமான திருமழபாடி அருகில் தனது பெயரில் கண்டிராதித்த சதுர்வேதிமங்கலம் என்ற பகுதியை நிறுவி அங்கே கண்டிராதித்த விண்ணகரம் என்ற ஆலயத்தை பெருமாளுக்கு நிர்மானித்துள்ளார், அந்த ஆலயம் தற்போது அங்கு இல்லை , இவரது மனைவியான செம்பியன்மாதேவியார் தமது வாழ்நாளில் சிவத்தொண்டு புரிந்து பழுத்த பழமானார் ஐந்து மன்னர்களின் ஆட்சியில் சிறப்பாகவாழ்ந்ததை இவரது கல்வெட்டே நமக்கு கூறுகிறது , இவர் பல்வேறு ஆலயங்களை புணரமைத்து திருப்பணி செய்திருந்தாலும் தமது கணவரின் பெயரில் ஓர் ஆலயத்தை கோனேரிராஜபுரத்தில் எடுப்பித்து அங்கே தன்கணவர் இறைவனை வழிபடுவதைப்போல் சிற்பம் வடித்துள்ளார் ,
ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கண்டிராதித்த சோழர் ஸ்தாபித்த கண்டிராதித்தசதுர்வேதிமங்கலம் என்று சிறந்த அந்த ஊர் இன்றும் அரியலூர் மாவட்டத்தில் இன்றும் #கண்டிராதித்தம் என்றபெயரிலேயே விளங்குவது மேலும் சிறப்பு இவ்வூரில் இத்தம்பதியரின் அருந்தவப்புதல்வன் உத்தமசோழர் எடுப்பித்து குலோத்துங்கசோழனால் திருப்பணி செய்யப்பட்ட சொக்கநாதர் ஆலயம் தற்போது சில நல்லஉள்ளம் கொண்ட அன்பர்களினால் புதுப்பிக்கும் பணியில் உள்ளது மகிழ்வை தருகிறது , அத்தோடு நில்லாமல் சில ஆண்டுகளுக்குமுன்பு தமது ஊரின்பெயர் காரணத்தைஅறிந்து அம்மன்னர் பெருமானுக்கும் அவரது துணைவியாருக்கும் ஊரின் மத்தியில் சிலை நிறுவிஅறிஞர்பெருமக்களை அழைத்து விழாஎடுத்து மரியாதை செலுத்தியுள்ளனர் .
No comments:
Post a Comment