Wednesday, 18 July 2018

திருவையாறு
பஞ்சவன்மாதேவிச்வரம்
தென்கயிலாயம்
என்று இன்று அழைக்கப்படும் இவ்வாலயம் பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டருளிய ஐய்யன் எனும் சிவசரணசேகரன்
  முதலாம் ராஜேந்திரனின்  ஙயக  ஆண்டினில் அவரது மனைவியான பஞ்சவன்மாதேவியார்  என்பரால் எடுக்கப்பட்டது இதனை கல்வெட்டுகளில் தென்கயிலாயம் என்றே கூறப்படுகிறது ,
ஆலயமானது கருவறை உள்மண்டபம் முன்மண்டபம் திருச்சுற்றுமாளிகையோடு அழகுசேர்க்கிறது ,
திருச்சுற்றுமாளிகை தூண்கள் கருமைநிற மாக்கல்லால் ஆன நுளம்பர்களைப்பாணியைசேர்ந்த நுண்ணியவேலைப்பாடுகள் கொண்டவை
மொத்தம் நாற்பத்தியாறு தூண்கள் இவற்றில் நான்குமட்டுமே கலைநயத்தோடு அழகியவேலைபாடுள்ளது ,
தேவகோட்டத்தில் வீரபத்திரர் ,வென்குடையின்கீழ்நிற்கும்  வினாயகர் ,சுகராசனத்தில் அமர்ந்த ஈசனின் மாறுபட்ட சிற்பங்களும் துர்கை மற்றும் சேயோன் என அழகு சேர்கின்ற ஆலயம் இன்று எளியோரின் பசிப்பிணி போக்கும்  அன்னதானக்கூடமாய் விளங்குகிறது .








பழுவேட்டரையர்கள் 

கீழப்பழுவூர்-கீழையூர் -மேலப்பழுவூர் 

மறவனீச்சுவரம் -ஆலந்துரைமஹாதேவர் ஆலயம் -இரட்டைக்கோவில்  -பகைவிடைஈஸ்வரம் .

சிற்றரசர்களின் சரித்திரத்தில் இத்துனை பெயரோடும் புகழோடும்  இருந்திருக்குமா!

 பேரரசின்கீழிருந்தும், தனக்கென  தனி படைக்களத்தோடுராஜ்ஜியம் புரிந்திருக்குமேயானால் !அப்பேரரசில் எத்துனை  மதிப்பும் செல்வாக்கும் நம்பிக்கையுடைய உறவும் பூண்டிருத்தல்வேண்டும்.

பேரரசு செலுத்திய மன்னர்பெருமக்கமள் இறைவனுக்கு தமது பெயரைசூட்டி ஆலயம் எடுத்தமைபோல் பழுவேட்டரையர் தன்பெயரில் எடுப்பித்த க்கற்றளி #மறவனீச்சுவரம் அதன்பின் அவரது சந்ததியினர்  அவர்களது ஆட்சிக்குட்பட்டப்பகுதியில் எழிலார்ந்த பேரழகுவாய்ந்த திருக்கற்றளிகளை எடுப்பித்துத்தருளுகின்றனர் ,

மேலும் ,

 பழுவூர் சிற்றரசமரபினர் சோழப்பேரரசு ஆட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள ஆலயங்களுக்கெல்லாம் அரும்பெரும் அறக்கொடை புரிந்துள்ளமையை காணும்போது அவர்கள் எத்தனை செல்வச்செழிப்போடு இருந்துள்ளனர் என அறியமுடிகின்றது அவைகள் ,

திருவையாறு பஞ்சநதிஸ்வரர் , திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் ,லால்குடி சப்தரிஷிகேஸ்வரர், உடையார்குடி அனந்தீஸ்வரர் ,கோவிந்தபுத்தூர் கங்காஜடாதீஸ்வரர் போன்றவைகளை கூறலாம் . சிற்றரசர்களாக இருந்தபோதிலும் அரசுசெலுத்துவதிலும், அறம்செய்தததிலும் , சிவப்பணியிலும், தன்னைநிலைநிறுத்திக்கொண்டனர் .

இவர்கள்  எடுப்பித்த ஆலயங்களில் மறவனீசுவரம் எனும் பசுபதீஈஸ்வரர் ஆலயம் அழிவுறும் நிலையில் உள்ளது, அருகிலிருக்கும் ஆலந்துரையார் ஆலயம் சமீபத்தில் சீரமைத்து குடமுழுக்கு நடைபெற்று வண்ணமயமாய் காட்சிதருகிறது .ஆனால அருகிலேயே இருக்கும் இந்த பாசுபதீசுவரரை உள்ளூர் மக்கள் கைவிட்டபோதும் இறைவன் அரியலூர்- தஞ்சைசாலையில் வருவோர்போவோர் அனைவரிலும் எவரேனும் ஒருவர் தமது இருப்பிடத்தை காத்தருள்வர்என்று காத்திருக்கிறார் பன்நெடுங்காலமாக.

ஆறுதலான விஷயம் சிவனடியார்கள் சிலர் ஆலயத்தை கவனித்துக்கொள்கிறார்கள் விரைவில் இவ்வாலயமும் புத்துயிர் பெறவேண்டுமென்று ஆவாகொண்டு அவர்கள் பதாகை வைத்துள்ளனர் , தொல்லியல்துறையும் இந்துசமய அறநிலையத்துறையும் அவர்களது சிறப்புக்களை சொல்லத்தேவையில்லை ? 

மாபெரும் மன்னன் எடுப்பித்த # மானம்பாடி ஆலயத்தையே !மண்மேடாய் மாற்றிவிட்டனர். 

















#கண்டிராதித்தசதுர்வேதிமங்கலம்
#கண்டிராதித்தர்
#செம்பியன்மாதேவியார் 

              வரலாற்றை வரலாறாகமட்டும் பாராமல் இன்றும் அந்த ஊர் மக்கள் உணர்விலும் உள்ளத்திலும் அசைபோட்டுக்கொண்டிருப்பதை காண்கையில் மற்ற ஊர்மக்களும் இதுபோல் வரலாற்று தொன்மையையும் பாரம்பரியசின்னங்களின் மீதும் சிறிதளவேனும் அக்கறை கொண்டால்போதும் இன்னும்பலத்தலைமுறைகளுக்கு பாதுக்காப்பாய்க்கணக்கிடைத்திடும் ,

மதிரைக்கொண்ட கோப்பரகேசரியின் முதற்புதல்வன் ராஜாதித்தன் தக்கோலப்போரில் இறந்துவிட இரண்டாம் புதல்வன் கண்டிராதித்தசோழர் ஆட்சிப்பொறுப்பேற்கிறார்  ( 950 - 957 ) சிவநெறிசெல்வரான இவர் பாடிய திருப்பதிகம் ஒன்பதாம் திருமுறையில் உள்ளது குறிப்பிடதக்கது , இம்மன்னர் பெருமான் காவிரியின் வடகரைத்தலமான  திருமழபாடி அருகில் தனது பெயரில் கண்டிராதித்த சதுர்வேதிமங்கலம் என்ற பகுதியை நிறுவி அங்கே கண்டிராதித்த விண்ணகரம் என்ற ஆலயத்தை பெருமாளுக்கு நிர்மானித்துள்ளார், அந்த ஆலயம் தற்போது அங்கு இல்லை , இவரது மனைவியான செம்பியன்மாதேவியார் தமது வாழ்நாளில் சிவத்தொண்டு புரிந்து பழுத்த பழமானார்  ஐந்து மன்னர்களின் ஆட்சியில் சிறப்பாகவாழ்ந்ததை இவரது கல்வெட்டே நமக்கு கூறுகிறது , இவர் பல்வேறு ஆலயங்களை புணரமைத்து திருப்பணி செய்திருந்தாலும்  தமது கணவரின் பெயரில் ஓர்  ஆலயத்தை கோனேரிராஜபுரத்தில் எடுப்பித்து  அங்கே தன்கணவர் இறைவனை வழிபடுவதைப்போல் சிற்பம் வடித்துள்ளார் , 

ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கண்டிராதித்த சோழர் ஸ்தாபித்த கண்டிராதித்தசதுர்வேதிமங்கலம் என்று சிறந்த அந்த ஊர் இன்றும் அரியலூர் மாவட்டத்தில் இன்றும் #கண்டிராதித்தம் என்றபெயரிலேயே விளங்குவது மேலும் சிறப்பு இவ்வூரில் இத்தம்பதியரின் அருந்தவப்புதல்வன் உத்தமசோழர் எடுப்பித்து குலோத்துங்கசோழனால் திருப்பணி செய்யப்பட்ட சொக்கநாதர் ஆலயம் தற்போது சில நல்லஉள்ளம் கொண்ட அன்பர்களினால் புதுப்பிக்கும் பணியில் உள்ளது மகிழ்வை தருகிறது , அத்தோடு நில்லாமல் சில ஆண்டுகளுக்குமுன்பு தமது ஊரின்பெயர் காரணத்தைஅறிந்து  அம்மன்னர் பெருமானுக்கும் அவரது துணைவியாருக்கும் ஊரின் மத்தியில் சிலை நிறுவிஅறிஞர்பெருமக்களை அழைத்து விழாஎடுத்து மரியாதை செலுத்தியுள்ளனர் .