மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர்
முதலாம் குலோத்துங்கசோழன் தமது 43வது ஆட்ச்சி ஆண்டில் கிபி (1113) ல் கற்றளியாக எடுப்பித்ததலம் .
ஆகினும் மூவர் பாடிய வைப்புத்தலமாகும்
இறைவன் அமிர்தகடேஸ்வரர்
தாயார் சோதிமின்னம்மை
தலவரலாறு
பார்கடலில் அமிர்தத்தை பெற்ற தேவர்கள் ஐங்கரனை துதியாமல் உண்ணமுற்படுகையில் அதனை ஐங்கரன் பூலோகத்தில் மறைத்துவைக்க செல்கையில் ஓர்கடம்பவனக்காட்டில் சிறுதுளிவிழுந்து சுயம்பாக அருளியது அங்கே இந்திரனின் தாயார் அதிதி உச்சிவேலையில் நித்தமும் பூசித்தார் இந்திரன் தன் தாயாருக்காக லிங்கத்தினை பெயர்த்து இந்திரலோகம் செல்லமுற்படுகையில் விநாயகரை வணங்கி அனுமதி பெறாமல் விரைந்தான் எனவே முழுமுதற்கடவுள் தேரினை காலால் அமிழ்த்தி தடுத்தார் ,
அதன்பொருட்டே குலோத்துங்கனும் இக்கோவிலினை தேர் வடிவத்தில் நான்கு சக்கரத்துடன் குதிரைகள் இழுத்துச்செல்வதைப்போன்று நிர்மாணித்தான் .
சிற்பியும் அதனை கருத்தில்கொண்டு முன்சக்கரமும் பீடமும் சற்று உயர்ந்தும் பின்சக்கரங்களும் பீடமும் சற்று புதைந்தாற்போல் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர் கருவறையை சுற்றிய கோஷ்டத்தில் நாயன்மார்களின் வரலாற்றினை குறும்சிற்பத்தொகுதியாக அழகுற படைத்துள்ளார்கள் ,
ஆண்டின் பங்குனித்திங்கள் 3,4,5 தேதிகளில் சூரியனின் செங்கதிர்கள் இறைவனை பூசிக்கின்றன

No comments:
Post a Comment