Tuesday, 14 March 2017

 மேலரசூர் கிராமத்திற்கு சென்ற போது அங்கு் பாழடைந்த நிலையில் ஓர் சிவாலயம் என்னை ஈர்த்தது அதனைப்பற்றி அறிய அருகில் இருந்த முதியவரிடம் அனுகியபோது மிகவும் பழமைவாய்ந்தது என்றார் யார் கட்டினார்கள் என தெரியாது என்றும் சில வருடங்களுக்கு முன் சிலர் ஆராய்ந்தார்கள் அவர்கள்
 ஆலயத்தின் வாயிலின் முன்பு உள்ள அந்தக்கல்தூணைப்பற்றி கூறிய தகவலை கேட்டு அதிர்ந்தே போனேன் நம்முன்னோர்கள் பயன்படுத்திய அதிபயங்கர ஆயுதம்தான் அந்த கல்தூணில் உள்ளது என்றார்
அது வட்டவடிவில் இருவிரலால் எதிரிகள் மீது வீசி தாக்குதல் நடத்தும் அமைப்பில் இருக்கிறது மேலும் அந்ததூணில் உடுக்கை ஏர்கலப்பை வாள் மற்றும் கும்பமும் இருபுறமும் குத்துவிளக்கும் காணப்படுகிறது
ஆலயத்தின் சுற்றுச்சுவரில் இறைவனின் மீது பால்சொறியும் காமதேனுவின் புடைப்புச்சிற்பமும் இறைவனை பூஜிக்கும் மயிலும் அழகாய் கண்களுக்கு விருந்துபடைத்தது  இருப்பினும் அன்று செழிப்புடன் கம்பீரமாய் அருள்பாளித்த அந்த க்ஷேத்திரம் இன்று கவலை கொள்ளும் நிலையில் இருப்பதை காணும்பொழுது நெஞ்சத்தில் பெரும் துன்பம் ஆட்க்கொண்டது 





















No comments:

Post a Comment