அறிவர் கோவில் என்று அந்த சமணத்துறவிகள் என்ன காரணத்திற்க்காக பெயரிட்டார்களோ தெரியவில்லை அனால் இன்று சித்தன்னவாசல் என்றுகூறினால் போதும். உலகே அறிவர் அக்கோவிலின் பெருமையை ,
கிபி 6 மற்றும் ஏழாம் நூற்றாண்டின் இடைப்பட்டகாலத்தில் வரையப்பெற்றதாய் கருதும் அந்த தாமரைத்தடாகத்தையும் சமணத்தீர்த்தங்கர்களின் புடைப்புச்சிற்பங்களையும் காணும் பேறுபெற்றேன் .
குடைவறையின் உள்ளே மூன்று புடைப்புச்சிற்பங்கள் அமர்ந்தநிலையில் உள்ளனர் அவர்களின் நாமம் அறியபடவில்லை . அவ்வறையின் ஒரு மேற்பகுதியில் சக்கரத்தின்நடுவே தாமரை கவிழ்ந்தநிலையில் செதுக்கப்பட்டுள்ளது அதன் முனை உடைந்துள்ளது .
அறையினுள் எங்கிருந்து ஓம் என்று கூறினாலும் அத்தாமரையின் வழியே ஓம் எனும் ரீங்காரம் நம் செவியில் விழுந்து மெய்சலிர்க்கவைக்கிறது அறைக்குவெளியிலுள்ள மண்டபத்தின் இருபுறமும் வடக்கு மற்றும் தெற்கில் மஹாவீரர் மற்றும் பார்சுவநாதர் `அமர்ந்தநிலையில் உள்ளனர் அம்மண்டபத்தின் மேற்பகுதியில் பலவகையான உயிர்களும் களிப்புற்று இருக்கும் தடாகத்தின் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது .
அத்தடகத்தில் அல்லியம் தாமரையும் பூத்துக்குலுங்குகின்றன அவற்றை துறவியர் கொய்து கூடைகளிலும் கைகளிலும் நிரப்பிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களை கருத்தில் கொள்ளாமல் காட்டெருமைகள் இளைப்பாறுகின்றன ,பலவித மீன்கள் துள்ளிக்குதிக்கின்றன ,தனது இணையைப்பிரிந்தால் உயிரைமாய்த்துக்கொள்ளும் அன்றில்பறைவைகள் காதல்மொழிப்பேசி கூடிநிற்கின்றன மண்டபத்தூணின் முன்புறம் நவநாகரிக அணிகலன் அணிந்த இரு நாட்டிய பேரழகிகள் தங்களின் அழகையும் நளினத்தையும் நம்குலமகளிர் அப்பொழுதே நாகரீகத்திலும் நாட்டியக்கலைகளிலும் சிறந்து விளங்கினர் என்பதை பறைசாற்றுகின்றது அதனை வரைந்த ஓவியன் இருவருக்கும் முகபாவனை மற்றும் அணிகலன்களில் அங்கஅசைவுகளில் தனித்தன்மை காட்டியுள்ளரார் .அத்தூணில் ஒருபுறம் பிற்காலத்தில் இதனை புதுப்பித்த பாண்டிய மன்னன் தன் தேவியுடன் நிற்க்கும் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது , இக்குடைவரைக்குன்றின் பின்புறம் இயற்கையாக அமைந்த குகையினுள் சமணத்துறவிகளின் படுக்கை வடிக்கப்பட்டுள்ளது அவற்றில் கிமு 2முதல் கிபி 10வரைவாழ்ந்து தவம்புரிந்த துறவிகளின் குறிப்புக்கள் பிராமி மற்றும் தமிழில் வடிக்கப்பெற்றுள்ளன .
அவற்றின் தொன்மையும் முக்கியத்துவையும் அறியாத இளம் தலைமுறை காதல் கிறுக்கர்கள் தங்களின் கைவண்ணத்தை காட்டி சிதைத்திருப்பதுதான் அறிவர்கோவிலின் அருமையை மற்றும் நம் புராதனசின்னங்களை அறியாமல் இருப்பதை வேதனையுடன் வெளிப்படுத்துகின்றது .