Wednesday, 10 October 2018

kingraja: #பழுவேட்டரையர்கள் #கீழையூர் #இரட்டைக்கோயில் இத...

kingraja:
#பழுவேட்டரையர்கள் 
#கீழையூர் 
#இரட்டைக்கோயில் 
இத...
: #பழுவேட்டரையர்கள்  #கீழையூர்  #இரட்டைக்கோயில்  இது அணுக்கன்வாயில் அளவிற்க்கு அத்தனை பிரசித்தம் பெற்ற நுழைவுவாயில் இல்லை , இருப்பி...

kingraja: திருவையாறுபஞ்சவன்மாதேவிச்வரம்தென்கயிலாயம்என்று ...

kingraja: திருவையாறு
பஞ்சவன்மாதேவிச்வரம்
தென்கயிலாயம்
என்று ...
: திருவையாறு பஞ்சவன்மாதேவிச்வரம் தென்கயிலாயம் என்று இன்று அழைக்கப்படும் இவ்வாலயம் பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டருளிய ஐய்யன் எனும் ...

kingraja: பழுவேட்டரையர்கள் கீழப்பழுவூர்-கீழையூர் -மேலப்பழுவூ...

kingraja: பழுவேட்டரையர்கள் கீழப்பழுவூர்-கீழையூர் -மேலப்பழுவூ...: பழுவேட்டரையர்கள்  கீழப்பழுவூர்-கீழையூர் -மேலப்பழுவூர்  மறவனீச்சுவரம் -ஆலந்துரைமஹாதேவர் ஆலயம் -இரட்டைக்கோவில்  -பகைவிடைஈஸ்வரம் . சிற்...

kingraja: #கண்டிராதித்தசதுர்வேதிமங்கலம்#கண்டிராதித்தர்#செம...

kingraja: #கண்டிராதித்தசதுர்வேதிமங்கலம்
#கண்டிராதித்தர்
#செம...
: #கண்டிராதித்தசதுர்வேதிமங்கலம் #கண்டிராதித்தர் #செம்பியன்மாதேவியார்                வரலாற்றை வரலாறாகமட்டும் பாராமல் இன்றும் அந்த ஊர் மக்கள...

Monday, 1 October 2018

தொலைந்த நம் கலைகள்

பாரம்பரியமிக்க நம் பைந்தமிழ் நாட்டில் ஐவகை நிலமக்களும் தமக்கென்று தனித்துவ குணத்துடன் கலை, பண்பாடு,தொழில்முறை ,இறைவழிபாடு என்று செழுமையாய் வாழ்ந்திருந்தனர் ,மேலும் நமது சங்க இலக்கியங்களும் கோன் புரிந்த சாதனைகளையும் குடிமக்களின் நிலைப்பாட்டையும் ,அவர்களின் தொழில்கள் ,கலைகள், மொழிப்பற்று போன்றவற்றினை பறைசாற்றுகின்றது ,
சங்க இலக்கியத்தில் கூறும்கலைகளில் பல சுவடழிந்தும் சில குற்றுயிரும் குலையுயிருமாக அழியும் நிலையை எதிர்நோக்கியுள்ளன.   
குறிஞ்சிநில மக்கள் சேயோனை துதித்து ஆடிய கூத்து குன்றக்குரவைக்கூத்து என்றும்  , முல்லைநில மாந்தர் மாயோனை துதித்து ஆடியக்கூத்து ஆச்சியர்குரவை என்கிறது தொல்காப்பியம் ,
மாதவி  பதினொருவகையான ஆடல்வகைகளை வெளிப்படுத்தினால் என்று அரங்கேற்றுகாதையில் சிலம்பு கூறுகிறது ,
 அவை  கொடுகொட்டி,பண்டாரங்க்கூத்து ,அல்லியத்தொகுதி , மல்லாடல் , துடிக்கூத்து , குடைக்கூத்து , குடக்கூத்து , பேடி , மரக்காலாடல் , பாவை மற்றும் கடையம் எனப்படும் .    அதனில் சாக்கைக்கூத்து மொன்று இதனை பறையூர் சாக்கைமாராயன் என்பான் சேரமன்னன் செங்குட்டுவன் அவையில் ஆடினான் என்பதனை
செங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும்    செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும்     பாடகம் பதையாது சூதகந் துளங்காது                                      மேகலை ஒலியாது மென்முலை அசையாது   வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது  உமையவள் ஒருதிற னாக ஓங்கிய   இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்   பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தச் சாக்கைய னாடலின் மகிழ்ந்தவன்,   என்று வஞ்சிக்காண்டம் பகர்கின்றது                                               " தேனார் மொழியார் திளைத்தங்காடித்  திகழும் குடமூக்கில் "
"வலம்வந்த மடவார் நடமாட முழவதிர மழையென் றஞ்சிசிச் சிலமந்தி அலமந்து மரமேறி முகில்பார்க்கும் திருவையாறே "
"தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்வார் உறையும் புகார் "
"சீராலே பாடல் ஆடல் சிதைவில்லதோர் ஏரார்பூங் கச்சி "என்று ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயக்குறவர்கள் ஆடல்கலைகளை புகழ்ந்துள்ளனர் 
                                                                         இப்படி குணக்கடல் முதல் குடக்கடல் வரை  செழித்த இக்கலையானதுதற்போது கேரளத்தில் மட்டுமே உள்ளது  இருப்பினும் பிற்கால சோழர்காலம் வரை இக்கலை தமிழகத்தில்  தழைத்தோங்கியது என்பதற்க்கு கல்வெட்டுகளாய் சில  சான்று  நிற்கின்றது ,                          முதலாம் ராஜராஜனின் தமையனும் வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேஸரி எனும் ஆதித்த கரிகாலனின் நான்காம் ஆண்டு கல்வெட்டு திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவிலில் திருவெள்ளறையை சேர்ந்த சாக்கையன்  கீர்த்திமறைக்காடன்  என்பவனுக்கு தானம் வழங்கியமை பற்றிய செய்திகூறுகிறது இவன் வைகாசி திருவாதிரைக்கும் தைப்பூசத்திருநாளுக்கும் ஆடியதாக கூறுகின்றது .                                                                                            கீழப்பழுவூர் ஆலந்துரையார் ஆலயத்தில் உள்ள உத்தமசோழரின் ஒன்பதாம் ஆட்சியாண்டு கல்வெட்டு அக்கோவிலில் ஐப்பசி மாத அஸ்வதி நாளில் நடைபெறும் திருவிழாவில் சாக்கைக்கூத்தாட அல்லையூரைச்சேர்ந்த சாக்கை ஆடுபவர்க்கு அரைக்கலஞ்சு பொன்னும் மூன்றுகலம்நெல்லும்வழங்கப்பட்டுள்ளது .                                                                      காமரசவல்லி கார்கோடேஸ்வரர் ஆலயத்திலுள்ள முதலாம் ராஜேந்திர சோழனின்   இருபத்தொன்பதாமாண்டு கல்வெட்டு வைகாசிமாதம் நடைபெறும் திருவாதிரை திருநாளில் சாக்கை கூத்தாட விக்கரமசோழனெனும் சாக்கை மாராயனுக்கு மூன்றுமா நிலம் இறையிலியாக வழங்கப்பட்டுள்ளது .இக்கலையானது தமிழகத்தில் முற்றிலும் அழிந்துவிட்டது எப்போது  இக்கலை தமிழகத்தில் மறைந்தது என்பதற்கு நேரடியான தரவுகள் இல்லை இப்படி எத்தனை எத்தனையோ   அதிசிறந்த கலைகளை வேந்தரும் மாந்தரும் போற்றிவளர்த்தனர் இன்றைய நாகரீககோமாளிகளான அவைகளை   தொலைத்தோம் , இன்னும் பலவற்றை தொலைத்துக்கொண்டுஇருக்கிறோம் .

(சாக்கை கூத்திற்கான புகைப்படம் கிடையாகாரணத்தால் குடக்கூத்து சிற்பத்தை பதிந்துள்ளேன் )

#பழுவேட்டரையர்கள் 
#கீழையூர் 
#இரட்டைக்கோயில் 
இது அணுக்கன்வாயில் அளவிற்க்கு அத்தனை பிரசித்தம் பெற்ற நுழைவுவாயில் இல்லை , இருப்பினும் அந்த வாயிலினுள்ளே சென்று  இறைவனை தரிசிக்கநாம்  பெரும்பேறுபெற  வேண்டும் !
             முதலாம் ஆதித்தனின் வெற்றிகளுக்கு பக்கத்துணையாக இருந்து அவர்தம் புதல்வனுக்கு தனது புதல்வியை  மணம்முடிக்கும் அளவிற்கு உறவை வலுப்படுத்தி அந்த பந்தம் முதலாம் ராஜேந்திரனின் காலம் வரை தொடர்ந்து  சோழ  சரித்திரத்தில் முக்கிய அங்கமாக விளங்கிய பழுவேட்டரையர்கள் திருவையாற்றில் உள்ள  முதலாம் ஆதித்தனின் பத்தாம் ஆண்டு கல்வெட்டு குமரன் கண்டனை அறிமுகப்படுத்துகிறது அதன் பிறகே இவர் சிற்றரசராக பதவி வகித்ததாக பலரது கூற்று . கீழையூரிலுள்ள முதலாம் ஆதித்தனின் பதிமூன்றாம் ஆண்டு கல்வெட்டே  இரட்டை கோவிலின் தொன்மையான கல்வெட்டு  குமரன் கண்டன் சிற்றரச பதவியேற்ற மூன்றே ஆண்டுகளில் அத்தனை கலைநயமிக்க இன்றளவும் சிறுமாற்றத்திற்கும் உட்படாமலும் கம்பீரமாக எண்ணற்ற வரலாற்றுப்பொக்கிஷங்களை தாங்கிநிற்கும் சிறப்பான கற்றளியை இருவகையான ஆலயமாக அமைத்து வடபுறமுள்ளகோவிலை வடவாயில் ஸ்ரீகோயில் என்றும் தென்புறமுள்ளஆலயம் தென்வாயில் ஸ்ரீகோயில் எனப்படுகின்றது திருச்சுற்றில் கணபதி, முருகன் ,சப்தமாதர் , மூத்ததேவி மற்றும் சூரியன் என பரிவார ஆலயங்களுடன் அமைந்துள்ளன வடவாயில் வேசரமைப்புடன் கூடியக்கற்றளியில் பிரம்மன், முருகன்  மற்றும்  மஹாதேவர் ஆகியோர் கோஷ்டத்தில் அமர்ந்தநிலையிலும் நாகர அமைப்புடன் கூடிய தென்வாயிலில் நின்றகோலத்திலும் மிகஅழகாக வடித்துள்ளனர்.   பழுவேட்டரையர்கள் சேரநாட்டை சேர்ந்தவர்கள் என்றுகூறுகிறபப்படுகிறதுபழுவேட்டரையர் வம்சத்தினர் எக்காலத்தில் பழுவூர் பகுதிகளில் புலம்பெயர்ந்தார்கள் என்பதை அறியமுடியவில்லை என்றாலும் ஏழாம்நூற்றாண்டிலேயே மலையாளிகள் பழுவூரில் வாழ்ந்ததை திருஞான  சம்மந்தர் பாடிய தேவாரப்பாடல் கூறுகிரது .
முதலாம் பராந்தகரின் பன்னிரெண்டாம் ஆட்சி  ஆண்டில் நடைபெற்ற வெள்ளூர் போரில் பாண்டியமன்னன் ராஜசிம்மனோடு நடைபெற்ற போரில் பழுவேட்டரையன் கண்டான் அமுதன் தமது படையோடு சென்று சோழர்கு வழுவூட்டி பாண்டியப்படையை புறங்காணச்செய்தனர் இப்படைக்கு பழுவூர் அருகில் உள்ள பரதூரைசேர்ந்த படைப்பேரரையன் நக்கன் சாத்தன் என்பவன் தலைமையேற்றான் இம்மாவீரன் தன்மன்னவனின் வெற்றிக்காக திருவாலந்துறை மஹாதேவர்க்கு நொந்தாவிளக்கெரிக்க கூய ஆடுகளும் பழுவேட்டரையர் கண்டன் அமுதன் பிறந்த நட்சத்திரமான புனர்பூச நாளில் இறைவனுக்கு நெய்யபிஷேகம் செய்ய உயச ஆடுகளும் தந்துள்ளான்.  இவ்வெற்றிக்குப்பிறகே முதலாம் பராந்தகன் மதுரைகொண்டகோப்பரகேசரி எனஅழைக்கப்பட்டார் இந்த ராஜசிம்மனது மணிமுடியே இலங்கையில் ஒளித்துவைக்கப்பட்டு பின்னர் முதலாம் ராஜேந்திரசோழனால் கைப்பற்றப்பெற்றது  , இக்கோயில் அமைந்தப்பகுதி அவனிகந்தர்வபுரம் எனவும் ஆலயமானது அவனிகந்தர்வபுரத்து ஈஸ்வரஹ்ரகம் எனப்படுகின்றது அவனிகந்தர்வபுரம் என்றால் பூலோகத்திலுள்ள தேவலோகம் போன்ற நகரம் அந்நகரத்தில் வாசம் செய்யும் இறைவன் அவனிகந்தர்வன் பூலோகத்து கந்தர்வபுருஷன் போன்ற அழகுடையவனை வணங்கிட நுழையும் மஹாமண்டபத்தின் முகப்புதான் இந்த நுழைவுவாயில் , மஹாமண்டபத்தினுள்ளேநாம் நுழைந்தவுடன்  சிம்மத்தூண்கள் இருபுறமும் கம்பீரமாக கர்ஜித்தவாறு  வரகேற்கின்றது  அத்தூண்களில் உள்ள  பழுவேட்டரையர்களின் பட்டப்பெயர்கள் 
ஸ்வஸ்தி ஸ்ரீ மறவன்மாநதநந் ,
ஸ்வஸ்திஸ்ரீ  கங்கமார்த்தாண்டன் //உ,
ஸ்வஸ்திஸ்ரீ  கலியுகநிர்மூலன் ,
ஸ்வஸ்திஸ்ரீ  அரையகள்  அறை உளி .
இப்பெயர்களை தாங்கி நிற்கின்ற சிம்மத்தூண்களை காணுகையில் சிம்மத்தையொத்த பெரும்வீராதிவீரர்கள்  பழுவேட்டரையர்கள்
குமரன்கண்டன் 
குமரன்மறவன் 
கண்டன்அமுதன் 
மறவன்கண்டன்                                                                                  ஆகியோர்களேஅச்சிம்மத்தூண்களாக  அவனிகந்தர்வபுரத்து மஹாதேவரை வணங்கவரும் நம் அனைவரையும் என்றும் அழியாப்புகளோடு நின்று வாழ்த்தி  வரவேற்பதைபோன்றதொரு எண்ணம் எமை ஆட்கொள்கிறது .

Wednesday, 18 July 2018

திருவையாறு
பஞ்சவன்மாதேவிச்வரம்
தென்கயிலாயம்
என்று இன்று அழைக்கப்படும் இவ்வாலயம் பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டருளிய ஐய்யன் எனும் சிவசரணசேகரன்
  முதலாம் ராஜேந்திரனின்  ஙயக  ஆண்டினில் அவரது மனைவியான பஞ்சவன்மாதேவியார்  என்பரால் எடுக்கப்பட்டது இதனை கல்வெட்டுகளில் தென்கயிலாயம் என்றே கூறப்படுகிறது ,
ஆலயமானது கருவறை உள்மண்டபம் முன்மண்டபம் திருச்சுற்றுமாளிகையோடு அழகுசேர்க்கிறது ,
திருச்சுற்றுமாளிகை தூண்கள் கருமைநிற மாக்கல்லால் ஆன நுளம்பர்களைப்பாணியைசேர்ந்த நுண்ணியவேலைப்பாடுகள் கொண்டவை
மொத்தம் நாற்பத்தியாறு தூண்கள் இவற்றில் நான்குமட்டுமே கலைநயத்தோடு அழகியவேலைபாடுள்ளது ,
தேவகோட்டத்தில் வீரபத்திரர் ,வென்குடையின்கீழ்நிற்கும்  வினாயகர் ,சுகராசனத்தில் அமர்ந்த ஈசனின் மாறுபட்ட சிற்பங்களும் துர்கை மற்றும் சேயோன் என அழகு சேர்கின்ற ஆலயம் இன்று எளியோரின் பசிப்பிணி போக்கும்  அன்னதானக்கூடமாய் விளங்குகிறது .