Monday, 1 October 2018


#பழுவேட்டரையர்கள் 
#கீழையூர் 
#இரட்டைக்கோயில் 
இது அணுக்கன்வாயில் அளவிற்க்கு அத்தனை பிரசித்தம் பெற்ற நுழைவுவாயில் இல்லை , இருப்பினும் அந்த வாயிலினுள்ளே சென்று  இறைவனை தரிசிக்கநாம்  பெரும்பேறுபெற  வேண்டும் !
             முதலாம் ஆதித்தனின் வெற்றிகளுக்கு பக்கத்துணையாக இருந்து அவர்தம் புதல்வனுக்கு தனது புதல்வியை  மணம்முடிக்கும் அளவிற்கு உறவை வலுப்படுத்தி அந்த பந்தம் முதலாம் ராஜேந்திரனின் காலம் வரை தொடர்ந்து  சோழ  சரித்திரத்தில் முக்கிய அங்கமாக விளங்கிய பழுவேட்டரையர்கள் திருவையாற்றில் உள்ள  முதலாம் ஆதித்தனின் பத்தாம் ஆண்டு கல்வெட்டு குமரன் கண்டனை அறிமுகப்படுத்துகிறது அதன் பிறகே இவர் சிற்றரசராக பதவி வகித்ததாக பலரது கூற்று . கீழையூரிலுள்ள முதலாம் ஆதித்தனின் பதிமூன்றாம் ஆண்டு கல்வெட்டே  இரட்டை கோவிலின் தொன்மையான கல்வெட்டு  குமரன் கண்டன் சிற்றரச பதவியேற்ற மூன்றே ஆண்டுகளில் அத்தனை கலைநயமிக்க இன்றளவும் சிறுமாற்றத்திற்கும் உட்படாமலும் கம்பீரமாக எண்ணற்ற வரலாற்றுப்பொக்கிஷங்களை தாங்கிநிற்கும் சிறப்பான கற்றளியை இருவகையான ஆலயமாக அமைத்து வடபுறமுள்ளகோவிலை வடவாயில் ஸ்ரீகோயில் என்றும் தென்புறமுள்ளஆலயம் தென்வாயில் ஸ்ரீகோயில் எனப்படுகின்றது திருச்சுற்றில் கணபதி, முருகன் ,சப்தமாதர் , மூத்ததேவி மற்றும் சூரியன் என பரிவார ஆலயங்களுடன் அமைந்துள்ளன வடவாயில் வேசரமைப்புடன் கூடியக்கற்றளியில் பிரம்மன், முருகன்  மற்றும்  மஹாதேவர் ஆகியோர் கோஷ்டத்தில் அமர்ந்தநிலையிலும் நாகர அமைப்புடன் கூடிய தென்வாயிலில் நின்றகோலத்திலும் மிகஅழகாக வடித்துள்ளனர்.   பழுவேட்டரையர்கள் சேரநாட்டை சேர்ந்தவர்கள் என்றுகூறுகிறபப்படுகிறதுபழுவேட்டரையர் வம்சத்தினர் எக்காலத்தில் பழுவூர் பகுதிகளில் புலம்பெயர்ந்தார்கள் என்பதை அறியமுடியவில்லை என்றாலும் ஏழாம்நூற்றாண்டிலேயே மலையாளிகள் பழுவூரில் வாழ்ந்ததை திருஞான  சம்மந்தர் பாடிய தேவாரப்பாடல் கூறுகிரது .
முதலாம் பராந்தகரின் பன்னிரெண்டாம் ஆட்சி  ஆண்டில் நடைபெற்ற வெள்ளூர் போரில் பாண்டியமன்னன் ராஜசிம்மனோடு நடைபெற்ற போரில் பழுவேட்டரையன் கண்டான் அமுதன் தமது படையோடு சென்று சோழர்கு வழுவூட்டி பாண்டியப்படையை புறங்காணச்செய்தனர் இப்படைக்கு பழுவூர் அருகில் உள்ள பரதூரைசேர்ந்த படைப்பேரரையன் நக்கன் சாத்தன் என்பவன் தலைமையேற்றான் இம்மாவீரன் தன்மன்னவனின் வெற்றிக்காக திருவாலந்துறை மஹாதேவர்க்கு நொந்தாவிளக்கெரிக்க கூய ஆடுகளும் பழுவேட்டரையர் கண்டன் அமுதன் பிறந்த நட்சத்திரமான புனர்பூச நாளில் இறைவனுக்கு நெய்யபிஷேகம் செய்ய உயச ஆடுகளும் தந்துள்ளான்.  இவ்வெற்றிக்குப்பிறகே முதலாம் பராந்தகன் மதுரைகொண்டகோப்பரகேசரி எனஅழைக்கப்பட்டார் இந்த ராஜசிம்மனது மணிமுடியே இலங்கையில் ஒளித்துவைக்கப்பட்டு பின்னர் முதலாம் ராஜேந்திரசோழனால் கைப்பற்றப்பெற்றது  , இக்கோயில் அமைந்தப்பகுதி அவனிகந்தர்வபுரம் எனவும் ஆலயமானது அவனிகந்தர்வபுரத்து ஈஸ்வரஹ்ரகம் எனப்படுகின்றது அவனிகந்தர்வபுரம் என்றால் பூலோகத்திலுள்ள தேவலோகம் போன்ற நகரம் அந்நகரத்தில் வாசம் செய்யும் இறைவன் அவனிகந்தர்வன் பூலோகத்து கந்தர்வபுருஷன் போன்ற அழகுடையவனை வணங்கிட நுழையும் மஹாமண்டபத்தின் முகப்புதான் இந்த நுழைவுவாயில் , மஹாமண்டபத்தினுள்ளேநாம் நுழைந்தவுடன்  சிம்மத்தூண்கள் இருபுறமும் கம்பீரமாக கர்ஜித்தவாறு  வரகேற்கின்றது  அத்தூண்களில் உள்ள  பழுவேட்டரையர்களின் பட்டப்பெயர்கள் 
ஸ்வஸ்தி ஸ்ரீ மறவன்மாநதநந் ,
ஸ்வஸ்திஸ்ரீ  கங்கமார்த்தாண்டன் //உ,
ஸ்வஸ்திஸ்ரீ  கலியுகநிர்மூலன் ,
ஸ்வஸ்திஸ்ரீ  அரையகள்  அறை உளி .
இப்பெயர்களை தாங்கி நிற்கின்ற சிம்மத்தூண்களை காணுகையில் சிம்மத்தையொத்த பெரும்வீராதிவீரர்கள்  பழுவேட்டரையர்கள்
குமரன்கண்டன் 
குமரன்மறவன் 
கண்டன்அமுதன் 
மறவன்கண்டன்                                                                                  ஆகியோர்களேஅச்சிம்மத்தூண்களாக  அவனிகந்தர்வபுரத்து மஹாதேவரை வணங்கவரும் நம் அனைவரையும் என்றும் அழியாப்புகளோடு நின்று வாழ்த்தி  வரவேற்பதைபோன்றதொரு எண்ணம் எமை ஆட்கொள்கிறது .

No comments:

Post a Comment