Friday, 2 February 2018

திருப்பூந்துருத்தி 


நண்பர்கள் திருச்சி பார்த்தி  முருகன் நட்ராஜ் மற்றும் செந்தலையில் இணைந்துகொள்ள அக்கோவில் சிறப்புக்களை கண்டுமகிழ்ந்த பிறகு பூந்துருத்தி செல்லலாம் எனக்கூறினேன் அவர்களும் இசைந்தார்கள் ஆலயத்தை அடைந்த பிறகு ஸ்தலவரலாற்றையும் கல்வெட்டு சிறப்புக்களையும் கையேட்டில் அலசினார் பார்த்தியும் முருகனும் 

1300ஆண்டுகளுக்கு முன்பே உழவாரப்பணியை சீரும்சிறப்புமாக எவ்வித  விளம்பரமும் இல்லாது இறைப்பணியை சிரமேற்கொண்டு பணித்துவந்தார் அப்பர்பெருமான். இச்செய்தி கேள்வியுற்ற சம்மந்தப்பெருமான் இறைவனையும் இறைப்பணியாளனையும் கண்டுசேவிக்க வருகைபுரிந்த சிவிகையை தானும் சுமந்து மகிழ்ந்த நெறியாளார் இப்பெரியோரோ உழவாரம்புரிந்த  புண்ணியஸ்தலத்தை நான் மிதியேன்என  வாயிலில் நின்றே இறைவனை தரிசிக்க வேண்டிட நந்தியெம்பெருமானும் நகர்ந்து இறைவனை வழிபட வழிவிட்டஸ்தலம் .

முதலாம் ஆதித்தன்,முதலாம்பராந்தகன் ,சுந்தரசோழர் ,உத்தமசோழர் ,ராஜாராஜர் ,ராஜேந்திரர்  ,குலோத்துங்கர் ,மற்றும் சுந்தரபாண்டியர் ஆகியோரது காலத்தில் உன்னதநிலையில் இருந்தமையை கல்வெட்டாய் சான்று பகர்கின்றது .                                                                                                                      தஞ்சை ராஜராஜேச்சுவரத்தில் ராஜராஜன் உலா அரங்கேறியது என்றால் இங்கே ராஜராஜன்விஜயம் எனும்நிகழ்வு அரங்கேறியுள்ளது ,இக்கல்வெட்டை காணவே நாங்கள் வெகுநேரம் தொலைத்து கடைசியில் வெளிக்கோபுரத்தின் அதிட்டானத்தில் இருந்தமையால் மண்ணில் புதைந்திருந்த பகுதியை சற்றுதொண்டி கண்டுமகிழ்ந்தோம் ,கோபுரத்தினில்  புடைப்புச்சிற்பங்களாய் இராவண அனுககிரகமூர்த்தி ,ஊர்த்துவத்தாண்டவர் ,கஜசம்காரமூர்த்தி ,காலசம்காரர் போன்றவை சுண்ணாம்புபூச்சையும் தாண்டி அழகுருகின்றது .