Tuesday, 12 September 2017

பழுவேட்டரையர்கள் 

பிற்காலசோழர்களின் சரித்திரத்தில் மிகவும் கவனிக்கத்தக்க சிற்றரசர்களிலே கீழப்பழுவூர் மேலப்பழுவூர்  பகுதிகளை தலைமையகமாகக்கொண்டு ஆட்ச்சிபுரிந்து சோழர்களின் உயிரிலும் உறவிலும் கலந்த பழுவேட்டரையர்களை காண்போம் இவர்களது குறிப்புகள்  கிபி 881முதல் 1020 அதாவது முதலாம் ஆதித்தசோழன் காலம்முதல் ராஜேந்திரசோழன் காலம்வரை  
குமரன்கண்டன், குமரன்மறவன் 
இவர்களின் மகளே  முதற்பராந்தகனின் மனைவியும் ஆற்றூர்துஞ்சின சோழதேவன் எனப்படும் அறிஞ்சயனின் அன்னையுமான அருள்மொழிநங்கையாவார் .
குமரன்கண்டனின் மகன் கண்டன்அமுதன் 
குமரன்மறவனின் மகன் மறவன்கண்டன் ஆகியஇருவரும் 
முதற்பராந்தகனுக்கும்  பாண்டியன் ராசசிமமனுக்கும் வெள்ளூரில் நடந்தப்போரில் மாபெரும்வெற்றியை ஈட்டியவர்கள்    இவர்களே  பெரியபழுவேட்டரையர் மற்றும் சின்னப்பழுவேட்டரையரகளாயிருத்தல்  வேண்டும்

மறவன்கண்டன் இவனின் புதல்வராக மூவர்குறிக்கப்படுகிறார்கள் 
கண்டன் சத்ருபயங்கரன் 
கண்டன் சுந்தரசோழன் 
கண்டன்மறவன் .
கண்டன்மறவனுக்குப்பிறகு பழுவேட்டரையரின் செய்திகளை அறியமுடியவில்லை    இப்பழுவூர் மன்னர்கள் தங்களாட்சிச்செய்த அவ்வூரில் அழகிய மூண்றுகற்றளிகளை நிர்மானித்துள்ளார்கள் 
அரியலூர் தஞ்சைநெடுஞ்சாலையில் கீழப்பலூரில் உள்ள ஆலந்துரையார் ஆலயம் 
திருச்சி சிதம்பரம் தேசியாநெடுஞ்சாலையில் உள்ள மேலப்பழுவூரில் அவனிக்கத்தர்ப்பஈஸ்வரக்ரகம் மற்றொண்று இதன் மேற்கே அமைந்த மீனாட்க்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயம் .
அவனிக்கத்தர்ப்பஈஸ்வரக்ரகம் இவ்வாலயத்தில்தான் முதலாமாதித்தன் முதல் ராஜேந்திரசோழர் வரையிலுள்ள  சோழமன்னர்களின் கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன .ராஜாராஜரின் மனைவியரில் ஒருவருமான ராஜேந்திரசோழனால் பள்ளிப்படை எடுத்துசிறப்பிக்கப்பட்டவருமான பஞ்சவன்மாதேவி   இவ்வூரை சார்நதவரே 
சோழர்களின் புகழை வான்முட்டசெய்தவர்களில் பழுவூர் மன்னர்களின் செயல் அளப்பறியது என்பதில் ஐயமில்லை