Tuesday, 4 April 2017

ஆவுடையார்கோவில்

ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகரால் எடுப்பித்த தேவாரபாடற்பெற்றஸ்தலம்  கட்டடக்கலையில் சிற்பவல்லுநகர்களே சிலாகித்துகூறும் அதிசய நுட்ப்பங்களை தன்னகத்தே உள்ளடக்கிய  ஆலயம் இவ்வாலயத்தின் சிறப்புக்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
மாணிக்கவாசகருக்கு இறைவன் உபதேசித்து அருளியஸ்தலம் ஆலயத்தின் உள்ளே நுழைகையில் வீரபத்திரர்கள் கம்பீரமாய் நின்று நம்எண்ணங்களை    சிவசிந்தனையில் நிறுத்துகிறார்கள் குரங்காய் அலையும் மனத்தில் இறைவன்மீது நமது பற்றை உடும்பைபோலே இருகப்பற்ற அவற்றின் சிற்பங்களை வடித்து நமக்கு குறிப்பால் உணர்த்தியுள்ளார்கள்  இறைவனின் திருவிளையாடல்களில் திருவாதவூராருக்காக (மாணிக்கவாசகர்) நரியை பரியாகமாற்றியதும் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பெற்றதும் நாம் அறிந்ததே ஆலயத்தூண்களில் குதிரைகளின் சிற்பத்தொகுப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக சிற்பியின் திறத்தை வெளிப்படுத்துகின்றது   .


இவ்வாலயமானது  மற்ற ஆலயங்களிலிருந்து தனித்தன்மையை பெற்றுள்ளது ,
இறைவன் லிங்கவடிவில் இல்லாமல் ஆவுடை மட்டுமே தனித்திருப்பது ,
கொடிமரம் பலிபீடம் போன்றவையும் இல்லாதிருப்பது ,
நவக்கிரகங்களை மூன்று தூண்களில் வடித்திருப்பது ,
தாயாரின் திருப்பாதம் மட்டுமே அம்பாளின் சந்நிதியில் நிலைக்கண்ணாடி மூலம்  சாளரத்தின்வாயிலாக வணங்கப்பெறுவது ,மற்றும் இறைவனின் முன்புள்ள ஒரு பலகைக்கல்லில் பாகற்காய் கலந்த அன்னத்தை அமுதுபடைத்து அன்பர்களுக்கு வழங்குவது , மேலும் தீபாராதனையை  கருவறையை விட்டு வெளியில் கொண்டுவருவதில்லை, உற்சவராக மாணிக்கவாசகரே அருள்கிறார் .

வில்லேந்தியமுறுருகனும் அழகுகொஞ்சும் பாவைவிளக்கும் கல்லாலான தீபஸ்த்தம்பமும்,மூலிகை ஓவியமும் தரையைவருடாத தொங்கும் தூணும் எனச்சொல்லிக்கொண்டேபோகலாம் ஆலயத்தினுள் நுழைந்தால் சிவத்தில் லயித்தோமோ இல்லை கலைநயத்தில் லயித்தோமோ  வெளியேறமானமில்லாமல் .