Thursday, 31 July 2014


இராஜேந்திர சோழன்

இராஜேந்திர சோழன் (கங்கையும்  கடாரமும் கொண்டஅய்யன் )கிபி 1012-1044 வரை  மாபெரும் ஆட்சி புரிந்த சோழர்குல திலகம்
ராஜேந்திரசோழன் 1000ம் ஆவது பட்டாபிஷேக தினம் (1014-2014) கங்கைகொண்ட சோழபுரத்தில் வெகு விமரிசையாககொண்டாடப்பட்டது தமிழர்களின் வீரத்திற்கும் சிறந்த ஆட்சிமுறைக்கும் எடுத்துகாட்டாக விளங்கிய பேரரசன் ராஜேந்திரசோழன் புகழ் வானமும் வையகமும் உள்ளவரை நிலைதிருக்கும் என்பதில் ஐயமில்லை
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் கொல் எனுஞ்சொல்.

என்கிற வள்ளுவபெருந்தகையின் அமுதமொழிக்கு ஏற்ப தந்தை இராஜராஜசோழனுக்கு மேலாக பேரும் புகழும் பெற்ற மாமன்னனின் புகழை பறைசாற்றுவதில் அடியேனுக்கும் சிறுஆவா தரணி உள்ளவரை தமிழன் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும்